1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (16:11 IST)

தமிழில் வாழ்த்து தெரிவித்த மோடி - வச்சு செய்த நெட்டிசன்கள்

இந்திய பிரதமர் மோடி தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. திமுக, விடுதலை சிறுத்தை, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல இடங்களில் கருப்பு கொடி காட்டப்படது. வானில், கருப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
 
இது ஒரு புறம் இருக்க, இன்று உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. எனவே, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வாழ்த்து சொல்ல வந்து விட்டீர்கள் என்கிற ரீதியில் பலரும் அவருக்கு எதிராக அவரின் டிவிட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.