செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஏப்ரல் 2018 (08:25 IST)

மோடி ஆந்திராவுக்கு வந்தால் தமிழகத்தை போல எதிர்ப்போம்: சந்திரபாபு நாயுடு

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்தபோது வரலாறு காணாத வகையில் எதிர்ப்பு கிளம்பியது. விமான நிலையத்தில் எதிர்ப்பு, கருப்புக்கொடி எதிர்ப்பு, கருப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பு என தமிழக எதிர்க்கட்சி தொண்டர்கள் தெறிக்க வைத்தனர். பிரதமருக்கு தமிழக மக்கள் தெரிவித்த இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து ஆந்திராவுக்கு பிரதமர் வந்தாலும் அவருக்கு எங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம் என்று ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தமிழக்த்திலாவது ஆளும் கட்சி பிரதமரின் வருகைக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால்  ஆந்திராவில் ஆளும் கட்சியே பிரதமர் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியிருப்பது பாஜகவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதே ரீதியில் பிரதமருக்கு எதிர்ப்பு கிளம்பினால் பிரதமருக்கு தென்னிந்தியா முழுவதிலும் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது பிரதமர் தென்னிந்தியாவுக்கு தேர்தல் சுற்றுப்பயணம் செய்தால் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என தெரிகிறது. இந்திய வரலாற்றில் தென்னிந்தியா முழுவதும் இந்திய பிரதமர் ஒருவரை எதிர்ப்பது இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகிறது.