1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (23:06 IST)

அமரர் ஆன பின்னர் அனிதாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டமே தனது கனவு என்று கண்விழித்து படித்த அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த பெருங்கோபம் சமூக வலைத்தளங்களில் எரிமலையாக வெடித்துள்ளது.



 
 
இந்த நிலையில் டாக்டர் அனிதா என்கிற பெயரில் நெட்டிசன்கள் உருவாக்கிய ஹேஷ்டாக் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது. எனவே அனிதாவுக்கு சமூக வலைத்தள மக்கள் அவர் அமரர் ஆன பின்னர் டாக்டர் பட்டத்தை கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்திற்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில், 'இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா? போங்கடா நீங்களும் உங்க.... மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு? எனக்கு அவ டாக்டர் தான்டா. நீங்க குடுக்காத டாக்டர் பட்டத்த நாங்க குடுப்போம் டா அவளுக்கு” எனத் தெரிவித்துள்ளார்.