இதற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஏன் போராடவில்லை: உதயநிதிக்கு நெட்டிசன்கள் கேள்வி

udhayanidhi
இதற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஏன் போராடவில்லை:
siva| Last Updated: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:42 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய திமுக, திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஏன் போராடவில்லை உதயநிதி ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்புவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஹாத்ரஸ் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி வேண்டும் என சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்தார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் சலூன் கடைக்காரரின் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனை கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: திண்டுக்கல்லில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, மின்சாரம் பாய்ச்சி கொன்ற வழக்கில் குற்றவாளி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க தமிழக அரசே மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும்
இந்த டுவிட்டுக்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் ஹாத்ராஸ் சிறுமிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது போல் திண்டுக்கல் சிறுமிக்கும் நீதி வேண்டும் என திமுகவினர் போராட்டம் நடத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்விக்கு உதயநிதி விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :