வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:47 IST)

ஆளுனர் மாளிகையை முற்றுகையிட முயற்சி; எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு!

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய எம்.பி கனிமொழி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் நீதி கேட்டு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற தொடங்கியுள்ளது.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நீதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் இறங்கிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவரோடு நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் ஆளுனர் மாளிகையை முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் கனிமொழி உள்ளிட்ட 119 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.