ஹாத்ராஸ் வழக்கில் ஆஜராகும் நிர்பயா வழக்கறிஞர்: பரபரப்பு தகவல்
ஹாத்ராஸ் வழக்கில் ஆஜராகும் நிர்பயா வழக்கறிஞர்
இந்தியாவில் தினமும் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் ஹாத்ராஸ் சென்ற கிராமத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் மட்டும் திடீரென அரசியல் ஆக்கப்பட்டதும் நிர்பயா பாலியல் பலாத்காரம் போன்று இந்த பாலியல் பலாத்காரமும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக இந்த பாலியல் வன்கொடுமை பிரச்சனையை கையில் எடுத்து அரசியல் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று சென்னையில் கனிமொழி தலைமையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஹாத்ராஸ் வழக்கில் வாதாடுவதற்கு நிர்பயா வழக்கில் வாதாடிய ஏ.பி.சிங் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நிர்பயா வழக்கில் அவர் மிகவும் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது போல் இந்த வழக்கிலும் அவர் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது