ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 ஜூன் 2019 (11:52 IST)

ஹெச் ராஜாவும் பானிபூரியும் ? – நெட்டில் வைரலாகும் டிவிட் !

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜாவிடம் டிவிட்டர் வாசி ஒருவர் வித்தியாசமானக் கேள்வி ஒன்றைக் கேட்டு கலாய்த்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா சமூக வலைதளங்களி எப்போதும் ஆர்வமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அவரைப் பின் தொடர்பவர்கள் மற்றும் பாஜக தொண்டர்களின் கேள்விகளுக்குப் பதிலும் அளித்து வருகிறார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட குறும்பர் ஒருவர்  ட்விட்டரில் ‘திரு ஹெச் ராஜா எனக்கு ஒரு தகவல் வேண்டும். அது உங்களால் மட்டுமேக் கொடுக்க முடியும் தமிழ்நாட்டில், கேட்கலாமா ?’ எனக் கேட்க ஹெச் ராஜாவும் ஆர்வமாக கேட்கலாம் எனக் கூறினார்.

அதற்கு அந்த குறும்பர் ‘ஒன்றும் இல்ல.. திரு ஹெச் ராஜா..பானிபூரி மைதா மாவுல போடனுமா இல்லா கோதுமை மாவுல போடனுமான்னுதான் டவுட்’ எனக் கலாய்த்து உள்ளார்.

இந்த கேள்வி பதில் ஸ்கிரீன்ஷாட்டுகளாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது