வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 10 ஜூன் 2019 (11:27 IST)

அந்த அரபிக் கடலோரம்... உருவாகப்போகுது புயல்; கொட்டி தீர்க்கப்போகுது மழை!

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், விரைவில் அது புயலாக மாறும் என எச்சரிக்கை விடப்படுள்ளது. 

 
ஆம், இந்திய வானிலை மையம் இது குறித்து வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு, லட்சத்தீவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் குரைண்ட காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 
 
அதன் பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். இதனால், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு பகுதியில் கனமழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. 
அதோடு சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மெதுவானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். 
 
சென்னைக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.