1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (08:27 IST)

விபத்துக்குள்ளான நெல்லை பள்ளிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை!

நெல்லையில் நேற்று கழிப்பறை சுவர் விழுந்து விபத்துக்குள்ளான பள்ளிக்கு மறுஅறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நெல்லையில் உள்ள சாஃப்டர் என்ற பள்ளியில் கழிப்பறை சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததை அடுத்து இடிபாடுகளுக்கிடையே சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த பள்ளிக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அலுவலர் அறிவித்துள்ளார் 
 
மேலும் சுற்றுச் சுவர் இடிந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலை பள்ளி ஆசிரியை, தாளாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது