தொடர்புடைய செய்திகள்
- வேலைவெட்டி இல்லாதவர்கள் என்னை பற்றி மீம்ஸ் போடுகின்றனர். ஜெயக்குமார்
- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அனிமோ மீட்டர் பொருத்தம்
- அறுந்து கிடந்த மின்வயர்: மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலி
- இன்று பகலிலும் மழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் தகவல்
- வானிலை மையம் எச்சரிக்கை - பீதியில் தமிழக மக்கள்
நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்
கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெல்லை அருகேயுள்ள பேட்டை பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
பேட்டையில் ஐந்து பெண்கள் இணைந்து நடத்திவந்த ஜெராக்ஸ் கடைக்குள் நீர் புகுந்ததால் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் பேப்பர்கள் மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் சேதம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதன்காரணமாக அந்த ஐந்து பெண்கள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல் பலகடைகளில் தண்ணீர் புகுந்து கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
