வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (18:05 IST)

நெல்லை கண்ணன் பேசிய வார்த்தைத் தவறானது… ஆனால் ? – வைகோ கருத்து !

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் குறித்து நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை கண்ணனின் பேச்சு குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ‘ நெல்லை கண்ணன் பேசிய வார்த்தை தவறானது. ஆனால் அவர் அந்த நோக்கத்தில் பேசியிருக்க மாட்டார் என நினைக்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

நெல்லைக் கண்ணனை கைது செய்ய வற்புறுத்தி பாஜக சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.