வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (21:03 IST)

ரூ. 120 லட்சம் கோடி திட்டங்கள்.... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
அடுத்த 5ஆண்டுகளில் 102 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். 
 
அடுத்த வருடத்தில் சில மாதங்களில் உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடு 300 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்தார்.
 
மேலும், 2020 ஆம் ஆண்டின் இடையே உலக அளவிலான முதலீட்டாளர் மாநாட்டை கூட்ட உள்ளதாகவும்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.