1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2023 (07:47 IST)

செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரயில்.. பயணிகள் மகிழ்ச்சி..!

Train
ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரயில் சேவை இனி செங்கோட்டை வரை நீடிக்கும் என்றும் இதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ரயில் அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது

 இது குறித்து தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரயில் எண். 16846 திருநெல்வேலி - ஈரோடு எக்ஸ்பிரஸ் திருநெல்வேலியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஈரோடு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கமாக ரயில் எண் 16845 ஈரோட்டில் இருந்து மதியம் 1.35 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டை வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால் அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், சேரன்மாதேவி வழியாக செங்கோட்டை செல்லும்

 மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அவை அனைத்தும் சிவகாசி வழியாக செல்கின்றன. ஆனால் அம்பாசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்த ரயில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva