1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain chances in three south districts

மீண்டும் நெல்லை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

nellai
திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி  மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன மழை பெய்ததால் நான்கு மாவட்ட மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். 
 
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தான் மேற்கண்ட நான்கு மாவட்டங்களும் படிப்படியாக வெள்ளத்தில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
 
இந்த  நிலையில் மீண்டும் தென்மாவட்டங்களில்  மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கன்னியாகுமாரி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து மேற்கண்ட 3 மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கேளிக்கை விடுதியில் வாக்குவாதம்....இளம்பெண் கார் ஏற்றிக் கொலை