செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 டிசம்பர் 2023 (12:48 IST)

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம்: அன்புமணி பேட்டி

சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடி விடலாம் என்றும் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலைதான் இப்போதும் உள்ளது என்றும் நெல்லையில் பாமக தலைவர் அன்புமணி பேட்டி அளித்துள்ளார்.

நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் சென்னை வானிலை மூடிவிடலாம் என்றும் சுதந்திரத்திற்கு முன்பு உள்ள நிலைதான் இப்போதும் உள்ளது என்றும் அவருக்கு காட்டமாக தெரிவித்தார்.

ஏற்கனவே  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் சரியான தகவல்களை வெளியிடவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார் என்பதும் அதேபோல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவும் வானிலை ஆய்வு மையம் சரியான எச்சரிக்கை விடவில்லை என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran