தொடர்புடைய செய்திகள்
- நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்!
- வக்கீலுக்கு அரிவாள் வெட்டு...சினிமா துணை நடிகர்கள் கைது
- 10 ஆம் வகுப்புத் தேர்வில் மகன் குறைத்த மதிப்பெண்...தந்தை தற்கொலை !
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி.!
- SSLC, +1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! – எப்படி பார்ப்பது?
பத்தாம் வகுப்பு தேர்வில் நெல்லை மாவட்டம் 94.19% தேர்ச்சி!
தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல். ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 4,207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினார். இதையடுத்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 11,126 மாணவர்கள்,11,274 மாணவிகள் என 22,400 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,156 மாணவர்கள், 10,942 மாணவிகள் என மொத்தம் 21,098 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 29 ஆவது இடத்தில் இருந்து நெல்லை மாவட்டம் தற்போது 20 இடங்கள் முன்னேறி 9வது இடத்தில் உள்ளது. அதன்படி மாணவர்கள் 91.28% , % மாணவிகள் 97.06 , % சதவீதம் தெர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
