வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மே 2024 (12:24 IST)

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரை காணவில்லை.. மகன் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் என்பவரை காணவில்லை என்று அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, 
 
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் என்பவர் கடந்த இரண்டாம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றதாகவும் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்றும் அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் 
ஏற்கனவே தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக கடந்த மாதம் ஜெயக்குமார் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில் அந்த புகாரின் பேரில் உவரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் 
 
இந்த நிலையில் திடீரென அவரை காணவில்லை என்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ள  நிலையில்  ஜெயக்குமார் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாகவும் இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran