திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:18 IST)

நீட் பயிற்சி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை; கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Train Track
மருத்துவ படிப்பிற்கான நீட் பயிற்சியில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூரை சேர்ந்த என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் ஒருவரின் மகள் நிஷா என்பவர் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வி அடைந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் அவர் பயிற்சி வகுப்பு சென்று வந்ததாகவும் நீட் பயிற்சி மையம் நடத்திய மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நிஷா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva