செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (14:33 IST)

”வசூல் ராஜா படம் மாதிரி இருக்கு”.. நீட் ஆள்மாறாட்ட வழக்கு குறித்து நீதிபதி கருத்து

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா, மற்றும் அவரது தந்தை வெங்டேசன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வெங்கடேசன் மற்றும் உதித் சூர்யா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மனுவை இன்று விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், மாணவர் உதித் சூர்யா மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் இந்த வழக்கு, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தில் வரும் திட்டம் போல் உள்ளது என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.