செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (13:51 IST)

அதிமுக 48!! எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மரியாதை..

அதிமுக 48 ஆவது ஆண்டை நெறுங்கிய நிலையில் சென்னை தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறிய எம்.ஜி,ராமச்சந்திரன் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். எம்.ஜி,ராமச்சந்திரன் திறனாலும் அதன் பின் கட்சி பொறுப்பை ஏற்ற ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்தாலும் தற்போதும் தமிழகத்தின் அசைக்கமுடியாத கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது.

இந்நிலையில் அதிமுக தொடங்கி 48 ஆவது ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் இருவரும் சேர்ந்து அதிமுகவின் கொடியை ஏற்றிவைத்தனர். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. ஆனால் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.