1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 செப்டம்பர் 2023 (17:36 IST)

200 வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு பாஜகவில் முக்கிய பதவி.. ரவுடி மனைவிக்கும் பதவி..!

200க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்த நிலையில் இணைந்த முதல் நாளே அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஏற்கனவே பாஜகவில் சில ரவுடிகள் இருப்பதாக திமுக உள்பட அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா இன்று பாஜகவில் இணைந்தார். 
 
200க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்த உடனே அவருக்கு  பட்டியல் அணி மாநில செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 
 
நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஏற்கனவே பாஜகவில் உள்ளார் என்பதும் அவருக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva