ஈரானில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறுங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை..!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வரும் சூழலில், ஒருவேளை போர் வெடித்தால் அவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மத்திய வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் ராணுவ ரீதியாக தயாராகி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பதற்றம் தணியும் வரை ஈரான் நோக்கிய பயணங்களை தவிர்க்குமாறும், அங்குள்ளவர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva