வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (13:08 IST)

நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம்: தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கையா?

Nayanthara Surrogacy
நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் வாடகை தாய் குழந்தைக்கு ஏற்பாடு செய்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்து உள்ளார் என்றும் வாடகை தாய் குறித்த ஆலோசனையை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று தான் நயன்தாராவுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து நயன்தாராவின் வாடகை தாயாக இருந்த உறவினர் யார்? அவருடைய சம்மதம் இருந்ததா? அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
 மேலும் நயன்தாராவுக்கு வாடகைத்தாய் குறித்து ஆலோசனை வழங்கி குழந்தை பெற்றுக்கொள்ள உதவி செய்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் வாடகை தாயாக இருந்தவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதா?  இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற ரீதியில்  விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran