வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம்!
சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான காட்ஃபாதர் திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்து வருகிறது.
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானை ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா தவிர பிற மாநிலங்களில் பெரியளவில் பிஸ்னஸ் செய்யவில்லை.
இந்நிலையில் இப்போது 100 கோடி ரூபாயைத் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளனர். தெலுங்கு வெர்ஷனிலேயே தமிழ்நாட்டில் அக்டோபர் 14 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. சிரஞ்சீவிக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ஹிட் படமாக காட்பாதர் திரைப்படம் அமைந்துள்ளது.