ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 மார்ச் 2024 (08:02 IST)

மனைவியை பிரியாணி கரண்டியால் தாக்கி கொலை செய்த கணவர்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை அயனாபுரத்தில் மனைவியை பிரியாணி கரண்டியால் கணவர் அடித்து கொலை செய்ய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி ரவிக்குமார் மற்றும் அவர் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த கணவர் ரவிக்குமார் வீட்டில் இருந்த பிரியாணி கரண்டியை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததாகவும் இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கணவர் ரவிக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஒரு சின்ன வாக்குவாத சண்டையில் பிரியாணி கரண்டியை எடுத்து ரவிக்குமார் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் அயனாவரம் பகுதியில் வரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva