வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (16:23 IST)

பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் மோடி- முதல்வர் விமர்சனம்

stalin
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நட்த்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், சமீபத்தில் பல்லடம் அருகேயுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்ற பிரதமர் மோடி அடுத்து சென்னையில் நடைபெற்ற  பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
 
இந்த நிலையில்  பிரதமர் மோடி  3வது முறையாக வரும் மார்ச் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார். அன்று சேலத்திலும், 16 ஆம் தேதி கன்னியாகுமரியிலும்,  18 ஆம்தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
 
இந்த நிலையில், சென்னை, தூத்துக்குக்குடியில் வெள்ளம் பாதித்தபோது பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராத பிரதமர் இப்போது அடிக்கடி வருகிறாரே என்ன காரணம்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இத்குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
''மாநிலங்களையே அழிக்க நினைக்கிறது பாஜக அரசு. அதன் மூலம் நமது மொழி, இனம், பண்பாட்டை அழிக்கப்  பார்க்கிறது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் வெற்றுப் பயணங்களாகத்தான் பார்க்கிறார்கள் இந்தப் பயணங்களால் எதாவது வளர்ச்சித் திட்டங்கள் வரப்போகிறதா? 2019 -ல் அடிக்கல்  நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இப்போதுதான் கட்டுமான பணியை தொடங்கப்போவதாக  நாடகம் நடத்துகிறார்காள். தேர்தல் முடிந்தததும் நிறுத்தி விடுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.