வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 மார்ச் 2024 (17:38 IST)

IPL போட்டிகளுக்கான டிக்கெட்..வெளியான முக்கிய தகவல்

ipl 2024
ஆன்லைனில் மட்டுமே ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகிறது.

ண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை கிங்ஸ் - பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதற்காக சென்னை கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான், லக்னோ ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
 
இந்த நிலையில்,காயம் காரணமாக இந்திய அணி வீரர் முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இருந்தும், டி20 கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியுள்ளார் என்று பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைனில் மட்டுமே ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகிறது.
 
அதாவது சேப்பாக்கம்  மைதானத்தில் சி.எஸ்.கே அணி விளையாட உள்ள போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.