திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (11:46 IST)

மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு: அண்ணாமலை அறிவிப்பு

மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு மனோதங்கராஜ்.  நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். 
 
ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை. 
 
ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். 
 
உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு.
 
Edited by Mahendran