1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. From tomorrow no green aavin milk distributed

நாளை முதல் பச்சை நிற ஆவின் பால் நிறுத்தம்.. இனி ஊதா நிற டிலைட் பால் மட்டுமே..!

பச்சை பால்
நவம்பர் 24 வரை மட்டுமே பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படும் என்று பால்வளத்துறை அறிவித்திருந்த நிலையில் நாளை முதல் பச்சை நிற பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

4.5 சதவீதம் கொழுப்பு சத்து இருந்த பச்சை நிற பால் உற்பத்தி செலவு அதிகம் காரணமாக நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது. அதற்கு பதிலாக 3.5 சதவீதம் கொழுப்பு உள்ள ஊதா நிற பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பச்சை நிற பாலின் விலை தான், ஊதா நிற பாலுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் ஆனால் ஒரு சதவீதம் ஊதா நிற பாலில்  கொழுப்பு சத்து குறைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வாங்கும் பச்சை நிற பால் நிறுத்துவது குறித்த தமிழக அரசின் முடிவுக்கு பாஜக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் இன்றுடன் பச்சை நிற பால் நிறுத்தப்படும் என்ற முடிவில் இருந்து தமிழக அரசு பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? நீலகிரி மாவட்ட நிர்வாகம் தகவல்..!