ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ12 கொள்ளை அடிக்கின்றனர்: அண்ணாமலை ஆவேசம்..!
ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என தமிழக பால்வளத்துறை அறிவித்துள்ள நிலையில் இது குறித்து அண்ணாமலை ஆவேசமாக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர் என்றும் தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை என்றும் திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர் என்றும் காமராஜரை அவதூறுகள் மூலம் தான் தோற்கடித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran