புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (17:19 IST)

இவ்வளவு தானா? பல வழக்குகளை பார்த்தவன் நான்: அண்ணாமலைக்கு மனோதங்கராஜ் பதிலடி..!

MANO THANGARAJ
அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அண்ணாமலை கெடு விடுத்த நிலையில் இன்று காலை அண்ணாமலை,  மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய்க்கான மாஷ்ட வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். 
 
இந்த நிலையில் அவருக்கு பதிலடியாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
இவ்வளவு தானா!!!
 
தம்பி அண்ணாமலை, தாங்கள் கால்ச்சட்டை போடுவதற்கு முன்பே (1988) பேச்சிப்பாறை நீர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம், கனிம வள பாதுகாப்பு போராட்டம் என எத்தனையோ மக்கள் பிரச்சனைகளுக்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் நான் ஏறி இறங்கிய வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தம்பியின் மான நஷ்ட வழக்கை பார்த்து ஓடி ஒளியவா போகிறேன்?
 
ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ?
 
Edited by Mahendran