செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2022 (16:35 IST)

திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் அதிர்வு: போக்குவரத்து நிறுத்தம்!

NH
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் அதிர்வு: போக்குவரத்து நிறுத்தம்!
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அதிர்வு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அதிர்வு ஏற்பட்டு அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டதால் அங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சில பகுதிகள் சேதம் அடைந்துள்ளது. 
 
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதிர்வு ஏற்பட்ட சாலையை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து போக்குவரத்து அந்தப் பகுதியில் நிறுத்தி வைப்பதாகவும் மாற்று வழியில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
திடீரென தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சாலை சேதமாகி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.