1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 28 மே 2022 (17:20 IST)

சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மயக்கம்

dindivanam
திண்டிவனத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட  குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்க்குப்பி  கிராமத்தில்  அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை இங்கு, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு வழங்கப்பட்டது.
இதைச் சாப்பிட்ட சுமார் 11 குழந்தைகள் மற்றும்  கர்ப்பிணிகள் உட்பட சுமார் 29 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
நெய்க்குப்பி கிராமத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை சாப்பிட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட 29 பேர்  மயக்கம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.