புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (12:48 IST)

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொழில் முன்னேற்றத்திற்கு சாலைகள் இன்றியமையாதவை என்பதால் தரமான சாலைகளை அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “தொழில்மயமான தமிழ்நாட்டிற்கு சாலைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களை விரைவுபடுத்த தேவையான முழு ஒத்துழைப்பையும் தமிழக அரசு வழங்கும்” என தெரிவித்துள்ளார். அதேசமயம் எட்டுவழி சாலை போன்ற மக்கள் எதிர்ப்பை சந்தித்துள்ள திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.