திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (14:45 IST)

காவலர் பெரியபாண்டி மரணம் - பேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட நாதுராம்

தமிழக காவலர் பெரியபாண்டி மரணத்தில் போலீசாரால் தேடப்படும் ராஜஸ்தான் குற்றவாளி நாதுராம் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பது தெரியவந்துள்ளது.

 
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் என்ற ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார். 
 
பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், முனிசேகர் என்ற காவலர் சுட்ட போது தவறி பெரியபாண்டியன் மீது பட்டதால் அவர் மரணமடைந்தது தெரிய வந்தது.

 
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம் என்பவனை போலீசார் தேடி வந்தனர். அவனது மனைவி மற்றும் நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கிராம மக்களின் ஆதரவு இருப்பதால் நாதுராமை கைது செய்யமுடியாமல் போலீசார் தவித்து வந்தனர்.

 
இந்நிலையில், நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கியுடன் நிற்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளான். மேலும், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் அவன் வெளியிட்டுள்ளான். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.