வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2018 (14:24 IST)

காதலன் சொன்ன ஒரு வார்த்தையால் தற்கொலை செய்து கொண்ட காதலி

அரியலூர் அருகே காதலன் சொன்ன ஒரு வார்த்தையால் மனமுடைந்த காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் சாலையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகள் ஆனந்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் பாஸ்கரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாஸ்கர், ஆனந்தியிடம் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாஸ்கர் ஆனந்தியிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.
 
இதனால் மனமுடைந்த ஆனந்தி, தன்னை ஏமாற்றிய பாஸ்கர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பேரில் போலீஸார் பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கர் ஆனந்தியிடம் சென்று, என்னை சிறைக்கு அனுப்பிய உன்னைக் கொன்றுவிடுவேன் என்றும் உன் கண்முன்னாடியே உன் அப்பாவை வெட்டுவேன். இதோடு மட்டுமல்லாமல் உங்க குடும்பத்தை அழிக்கிறேன் பாக்குறியா என மிரட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்து விஷமருந்திய ஆனந்தியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து ஆனந்தியின் தாயார் சின்னப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதிவாசிகள் ஆனந்தியை மிரட்டி தற்கொலைக்கு உட்படுத்திய பாஸ்கருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.