திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (13:15 IST)

பாஜகவிற்கு தாராளமாக சசிகலா செல்லட்டும், அதிமுகவுக்கு வரவேண்டாம்: நத்தம் விஸ்வநாதன்

sasikala
பாஜக அழைத்தால் அங்கு தாராளமாக சசிகலா செல்லட்டும் என்றும் அதிமுகவுக்கு வரவேண்டாம் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சசிகலா பாஜகவில் இணைய வேண்டுமென சமீபத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சசிகலா அது அவருடைய விருப்பம் என்றும் ஆனால் தான் பாஜகவில் இணைய போவதில்லை என்றும் கூறினார் 
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியபோது பாஜக அழைத்தால் சசிகலா தாராளமாக அங்கு செல்ல வேண்டும் என்றும் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் இரட்டை தலைமையின் கீழ்தான் அதிமுக வெற்றி கரமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்