திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 8 ஜூன் 2022 (21:22 IST)

தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது: உத்தவ் தாக்கரே

Uttav
பாஜகவினரின் கனவுகளுக்கு எதிராக நாங்கள் 2.5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளோம் என  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளை எங்களுக்குப் பின்னால் சுற்ற வைப்பதை விட, காஷ்மீரி பண்டிட்களின் நிலைமையில் கவனம் செலுத்துங்கள் எனவும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரின் அறிக்கையால், தேசமே அவமானத்தைத் தாங்க வேண்டியதாக இருக்கிறது எனவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜக மீது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.