தொடர்புடைய செய்திகள்
- விண்வெளிக்கு செல்லும் பிரபல நடிகர் !
- விண்வெளியில் தெரிந்த கடவுளின் தங்க கை!? – நாசா புகைப்படத்தால் சண்டை போடும் நெட்டிசன்கள்!
- வெற்றிகரமாக முடிந்த விண்வெளி சுற்றுலா! – பூமிக்கு திரும்பிய நால்வர் குழு!
- விண்வெளிக்கு மக்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்! – உலகமே வியந்து பார்க்கும் சாதனை!
- இயக்குனர் யாருனே தெரியல… ஆனாலும் தொடங்கிய பாபநாசம் 2 வேலைகள்!
செவ்வாயில் பெருக்கெடுத்து ஓடிய ஆறு! கண்டுபிடித்த பெர்சவரன்ஸ்! – புகைப்படங்கள் வைரல்!
செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் இருந்ததற்கான தடத்தை நாசா விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் வாயிலாக கண்டுபிடித்துள்ளனர்.
சமீப ஆண்டுகளில் உலக நாடுகள் பல செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் என்ற அதிநவீன விண்கலம் மற்றும் ரோவரை செவ்வாய்க்கு அனுப்பினர்.
பெர்சவரன்ஸ் அங்கு எடுத்த பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. அதில் சில புகைப்படங்களில் ஆற்றுப்படுகை போன்ற அமைப்பு காணப்படுகிறது. தொடர்ந்து நீர் நிலைகளில் படிப்படியாக நீர் குறையும்போது ஏற்படும் அரிப்புகளாலான வரிவரியான பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை நாசா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இது செவ்வாய் குறித்த ஆய்வில் மேலும் முன்னேற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
