புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:40 IST)

விண்வெளியில் தெரிந்த கடவுளின் தங்க கை!? – நாசா புகைப்படத்தால் சண்டை போடும் நெட்டிசன்கள்!

விண்வெளியில் எடுத்த புகைப்படம் ஒன்றை நாசா பதிவிட்டிருக்க அதை கடவுளின் கை என சிலர் கூறி வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் போன்றவற்றை ஆய்வு செய்து வரும் நிலையில் அவ்வபோது தொலைநோக்கியில் பிடித்த படங்கள் சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படுகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் நாசா சந்திரா எக்ஸ்ரே என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்ட் நெபுலா பகுதியில் நட்சத்திர பெருவெடிப்பால் ஏற்பட்ட தங்க நிற ஒளிக்கதிர் வீச்சின் படத்தை பகிர்ந்துள்ளது. அதை பார்க்க ஒரு கை போன்ற உருவமாக தெரிகிறது.

இந்நிலையில் கடவுள் நம்பிக்கை உள்ள சிலர் அது கடவுளின் தங்க கை (God’s Gold arm) என்று பெயரிட அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்க சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் பரபரப்பான விவாதமாகியுள்ளது.