வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (22:51 IST)

விண்வெளிக்கு செல்லும் பிரபல நடிகர் !

பிரபல மூத்த நடிகர் வில்லியம் சாட்னர் ஒருவர் விண்வெளிக்குச் சுற்றுலா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் நடிகர் வில்லியம் சாட்னர், அமேசான் தலைவர் ஜெப் பெகாஸோசின் புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல வுள்ளார்.

வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நியூ ஷெப்பர்ட் 18 விண்கலம் மூலமாக விண்வெளிக்குச் செல்லவுள்ள 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராக வில்லியம் சார்ட்னரும் செல்லவுள்ளார்.

விண்வெளிக்கு இவர் சென்று வந்தால், மிக அதிக வயதில் விண்வெளிக்குச் சென்று வந்த மனிதன் என்ற சாதனையைப் படைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.