செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (10:30 IST)

’இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் குறித்து பாஜக பிரபலம் கருத்து!

’இந்தி தெரியாது போடா’ ஹேஷ்டேக் குறித்து பாஜக பிரபலம் கருத்து!
திரை உலக பிரபலங்கள் சிலர் இந்தி மொழிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் உடைகளை அணிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. குறிப்பாக டுவிட்டரில் இதுகுறித்து ஹேஷ்டேக் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் டுவிட்டரில் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டுக்கள் இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பாஜகவுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை காண்பிக்கும் காண்பிக்கும் வகையில் இந்தி மொழிக்கு எதிராக பலர் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் இந்த ஹேஷ்டேக்கிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி என்பவர் இந்த குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியதாவது: ஹிந்தி_தெரியாது_போடா என்று சொல்வதை விட #தமிழ்_கற்றுக்கொள்ள_வாடா என்பதே தமிழனுக்கு சிறப்பு. இதை தான் தேசிய கல்வி கொள்கை சொல்கிறது. தமிழை வளர்க்கும் சிந்தனை இல்லாதவர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது?