திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (09:12 IST)

இது செம ஐடியாவா இருக்கே! – யுவன் டீசர்ட் குறித்து கனிமொழி எம்.பி ட்வீட்!

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் திரை பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு இந்திக்கு எதிரான நூதனமான விளம்பரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய கல்வி கொள்கையின் மூலமாக இந்தியை திணிக்க முயல்வதாக மத்திய அரசின் மீது தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தி திணிப்பிற்கு எதிராக திரை பிரபலங்களும் நூதனமான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தனது நண்பருடன் டீசர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அவரது டீசர்ட்டில் “I am a தமிழ் பேசும் Indian” என்றும் அவரது நண்பர் டீ சர்ட்டில் “ஹிந்தி தெரியாது போடா” என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த டீசர்ட்க்கு எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர எழுந்துள்ள நிலையில் மேலும் சில திரை பிரபலங்களும் இந்த டீசர்ட்டுக்களை அணிந்து பதிவுகளை இட்டு வருகின்றனர். இதுகுறித்து யுவனின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள திமுக எம்பி கனிமொழி ஆதரவாக பதிவிட்டுள்ளார்.