திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (07:58 IST)

அந்த பக்கம் போனீங்கனா உயிருக்கு ஆபத்து! – சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்!

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் எல்லையில் வழிதவறிய சீனர்களை இந்திய ராணுவம் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய – சீன இராணுவங்கள் இடையே எல்லையில் மோதல் நிகழ்ந்து வருவதால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே போர் மூளும் சூழலை தவிர்க்க இரு நாட்டு தரப்பிலும் பேச்சு வார்த்தைகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் வடக்கு சிக்கிம் பகுதியின் பீடபூமி பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் வழிதவறிய சீனர்கள் மூவர் மேலும் உயரமான பகுதியை நோக்கி சென்றுள்ளனர். இப்படியாக மேலும் உயரம் நோக்கி பயணித்தால் மைனஸ் டிகிரி குளிரில் அவர்கள் இறக்க நேரிடும் என உணர்ந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

அவர்களுக்கு சுவாசிக்க ஆக்ஸிஜன், சால்வை உள்ளிட்டவற்றை அளித்து சரியான திசையை காட்டி அனுப்பியுள்ளனர். சீனாவுடன் போர் நடந்து வரும் சூழலிலும் சீனர்களுக்கு உதவிய இந்திய ராணுவத்தின் செயல் பலரால் பாராட்டுகளை பெற்று வருகிறது.