தொடர்புடைய செய்திகள்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 'ஓர் அங்குலத்தைக் கூட இந்தியாவிடம் இழக்க முடியாது'- சீனா
- வெப் சீரிஸில் நடிக்க இருக்கும் கயல் ஆனந்தி! கிளாமரில் களமிறங்க காரணம் என்ன?
- பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு 5 வருஷமா சும்மா இருக்கும் இயக்குனர்! ரசிகர்கள் ஏக்கம்!
- 4 மாதத்தை விட 6 நாட்கள் கடினமாக உள்ளது – மற்றொரு கிரிக்கெட் வீரர் புலம்பல்!
- 'கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 9,746 பேருக்கு கொரோனா பாதிப்பு'
உலக கொரோனா பாதிப்பு: 2வது இடத்தை நெருங்கியது இந்தியா
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தை நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் 41,23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 41,10,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,431,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 192,818 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 27,061,880 என்பதும், 883,729 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
