1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (19:11 IST)

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை,  பிரகாஷ்ராஜை  கைது செய்யுமா? என பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
முதலமைச்சரை அவன், இவன் என்று  ஏக வசனத்தில் பேசியது தவறு தான் என்று சொன்ன நீதிபதி, பிரதமரை அவன், இவன் என்று பேசிய பிரகாஷ் ராஜ் மீது நடவடிக்கை எடுப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள் பிரதமரை அவன், இவன் என்று பேசியதை ரசித்து கேட்டு கொண்டிருந்தது சரி என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா? 
 
ஒருமையில் யாரையும் பேசுவதற்கு சவுக்கு சங்கருக்கும் உரிமையில்லை, பிரகாஷ் ராஜுக்கும் உரிமையில்லை. சட்டப்படி தவறு தான். சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை,  பிரகாஷ்ராஜை  கைது செய்யுமா? முதல்வருக்கு மரியாதை? பிரதமருக்கு அவமரியாதையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran