திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:00 IST)

குஜராத்தில் உள்ள இதையும் ஏற்று கொள்வீர்களா? முதல்வருக்கு பாஜக கேள்வி!

Narayanan
பிரதமர் மோடியின் குஜராத்தைப் போலவே தமிழகத்திலும் துணைவேந்தர்களை அரசே ஏற்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றம் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
ஓ! அப்படியா? அதே குஜராத்தில் உள்ளது போல் நீட் தேர்வை தமிழகத்தில் ஏற்றுக்கொள்வோம் என சொல்வீர்களா? குஜராத்தில் உள்ளது போல் மும்மொழிக் கொள்கையை ஏற்று கொள்வீர்களா? குஜராத் ஏற்று கொண்ட தேசிய கல்வி கொள்கையை தமிழகம் பின்பற்றும் என உறுதி அளிப்பீர்களா?
 
பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதியின் இந்த டுவிட்டிற்கு திமுகவினர் ஒருபக்கம் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.