ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:54 IST)

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் குறித்த தகவல்

nayanthara -vignesh
நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.

தென்னிந்திய திரையுலயில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ஷாருக்கானுடன் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது மார்க்கேட் மேலும் உயர்ந்தது.  தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார், அவரது சம்பளம் ரூ.5 கோடி முதல் ரூ. 8 கோடி முதல் வாங்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வரும் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்னேஷ் சிவனுடன் கோயிலுக்குச் சென்றபோது, நெற்றியில் குங்குமம் வைத்திருந்த நயன்தாராவின் புகைப்படம் வைரலான நிலையில் வரும் ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.