1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (16:57 IST)

கே.ஜிஎஃப் -2 படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுனர்

KGF-2 CELEBRATION
யாஷ் நடிப்ப்பில் பான் இந்தியா  படமக வெளியான கே.ஜிஎஃப் -2 படத்தின்  வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் வெளியான நான்கு நாட்களில் 540 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது.

வெளியாகி மூன்றாவது வாரத்தில் இப்போது வரை ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் இதுவரை சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு நாட்கள் வரை 540 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் கே.ஜிஎஃப் -2 படத்தின்  வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதில், நடிகர் யாஷ், பிரசாந்த் நீல தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.