வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:28 IST)

''பீஸ்ட் ''வெற்றிகொண்டாட்டம்.... படக்குழுவினருக்கு ட்ரீட் வைத்த விஜய்!

BEST TREAT
கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் பீஸ்ட். இப்படத்தின் நடிகர் விஜய்- பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் கலா நிதிமாறன் தயாரித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகும் என நெல்சன் திலீப்குமார் தெரிவித்திருந்தார்.

இ ந் நிலையில், பீஸ்ட் வெற்றியைக் கொண்டாடும் வகையில்,  படக்குழுவினருக்கு இன்று விஜய் தனது வீட்டில் விருந்தளித்தார்.

இதுகுறித்து, நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், பீஸ்ட் படத்தை வெற்றியடைய செய்த எல்லோருக்கு நன்றி. இப்படத்தின் விஜய் சாரின் உதவியும் அன்பும் இப்படத்திற்குப் பலமாக இருந்தது. சன்பிக்சர்ஸ் கலா நிதிமாறான், மிஸஸ், காவ்யா மாறனுக்கு எந்து நன்றிகள். பீஸ்ட் படக்குழினருக்கும்   நன்றி,

இப்படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு பீஸ்ட் படக் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறென் எனத் தெரிவித்துள்ளார்.